உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை,
பருகற்கு அமைந்தபால் நீர் அளாயற்றே;
தெரிவு உடையார் தீஇனத்தர் ஆகுதல், நாகம்
விரி பெடையோடு ஆடி, விட்டற்று.