சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய்,
மாரிபோல் மாண்ட பயத்தது ஆம்; மாரி
வறந்தக்கால் போலுமே,-வால் அருவி நாட!-
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு.