‘செய்யாத செய்தும் நாம்’ என்றலும், செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும், மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந் நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.