பொழிந்து இனிது நாறினும், பூ மிசைதல் செல்லாது,
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை-
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும், தக்கார் வாய்த்
தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு?