ஓதியும் ஓதார், உணர்வு இலார்; ஓதாதும்
ஓதி அனையார், உணர்வு உடையார்; தூய்து ஆக
நல்கூர்ந்தும் செல்வர், இரவாதார்; செல்வரும்
நல்கூர்ந்தார், ஈயார் எனின்.