புணர் கடல் சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே-
உணர்வது உடையார் இருப்ப, உணர்வு இலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே,
பட்டும் துகிலும் உடுத்து!