துய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான்,
வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த
பொருளும் அவனை நகுமே; உலகத்து
அருளும் அவனை நகும்.