ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டுஇனம்
பூத்து ஒழி கொம்பின்மேல் செல்லாவாம்;-நீர்த்து அருவி
தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட!-
வாழாதார்க்கு இல்லை, தமர்.