பிறந்த குலம் மாயும்; பேர் ஆண்மை மாயும்;
சிறந்த தம் கல்வியும் மாயும்;-கறங்கு அருவி
கல்மேல் கழூஉம் கண மலை நல் நாட!-
இன்மை தழுவப்பட்டார்க்கு.