பாவமும் ஏனைப் பழியும் பட வருவ,
சாயினும், சான்றவர் செய்கலார்;-சாதல்
ஒருநாள் ஒரு பொழுதைத் துன்பம்; அவைபோல்
அரு நவை ஆற்றுதல் இன்று.