மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக்கண்ணும், பெரு முத்தரையரே,
செல்வரைச் சென்று இரவாதார்.