கடை எலாம் காய் பசி அஞ்சும்; மற்று ஏனை
இடை எலாம் இன்னாமை அஞ்சும்;-புடை உலாம்
விற் புருவ வேல் நெடுங் கண்ணாய்!-தலை எலாம்
சொற் பழி அஞ்சிவிடும்.