பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், இந் நான்கின்
கொழித்து, அகலம் காட்டாதார் சொற்கள்,-பழிப்பு இல்
நிரை ஆமா சேக்கும் நெடுங் குன்ற நாட!-
உரை ஆமோ, நூலிற்கு நன்கு?