அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால்,
செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்-
கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல் தேற்றாதாங்கு.