சிறுகாலையே தமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார், இறுகிறுகி,
‘பின் அறிவாம்’ என்று இருக்கும் பேதையார், கை காட்டும்
பொன்னும் புளி விளங்காய் ஆம்.