பாட்டு முதல் குறிப்பு
கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை
நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே-
கொலை வல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
உரை