நல்லவை நாள்தொறும் எய்தார்; அறம் செய்யார்;
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார்; எல்லாம்
இனியார் தோள் சேரார்; இசைபட வாழார்;-
முனியார்கொல் தாம் வாழும் நாள்?