‘காழ் ஆய கொண்டு, கசடு அற்றார்தம் சாரல்,
தாழாது போவாம்’ என உரைப்பின், கீழ்தான்,
‘உறங்குவாம்’ என்று எழுந்து போமாம்; அஃது அன்றி,
மறங்குமாம், மற்று ஒன்று உரைத்து.