ஆர்த்த அறிவினர், ஆண்டு இளையர் ஆயினும்,
காத்து ஓம்பித் தம்மை அடக்குப; மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல்
போத்து அறார், புல்லறிவினார்.