நீருள் பிறந்து, நிறம் பசியதுஆயினும்,
ஈரம் கிடையகத்து இல் ஆகும்;-ஓரும்
நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும்,
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.