ஆமாபோல் நக்கி, அவர் கைப் பொருள் கொண்டு,
சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,
தாமாம் பலரால் நகை.