ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி, ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழி கேட்டு, தேறி,
‘எமர்’ என்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும்
தமர் அல்லர்; தம் உடம்பினார்.