கருங் கொள்ளும், செங் கொள்ளும், தூணிப் பதக்கு என்று
ஒருங்கு ஒப்பக் கொண்டானாம், ஊரன்;-ஒருங்கு ஒவ்வா
நல் நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது,
என்னையும் தோய வரும்!