சாய்ப் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன்மீது
ஈப் பறக்க நொந்தேனும் யானேமன்! தீப் பறக்கத்
தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்
நோக்கி இருந்தேனும் யான்!