முயங்காக்கால், பாயும் பசலை; மற்று ஊடி
உயங்காக்கால், உப்பு இன்றாம் காமம்;-வயங்கு ஓதம்
நில்லாத் திரை அலைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!-
புல்லாப் புலப்பது ஓர் ஆறு.