கண் மூன்று உடையானும், காக்கையும், பை அரவும்,
என் ஈன்ற யாயும், பிழைத்தது என்?-பொன் ஈன்ற
கோங்கு அரும்பு அன்ன முலையாய்!-பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி!