கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர் கொள் மாலை, மலர் ஆய்ந்து, பூத் தொடுப்பாள்,
கைம் மாலை இட்டுக் கலுழ்ந்தாள், ‘துணை இல்லார்க்கு
இம் மாலை என் செய்வது!’ என்று.