கண் கயல் என்னும் கருத்தினால், காதலி
பின் சென்றது அம்ம, சிறு சிரல்! பின் சென்றும்,
ஊக்கி எழுந்தும், எறிகல்லா-ஒண் புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து.