கழுமிய ஞாட்பினுள் மைந்து இழந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும்-அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து.