பாட்டு முதல் குறிப்பு
பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற-புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து.
உரை