இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீர, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற-செங் கண்
சின மால் பொருத களத்து.