பாட்டு முதல் குறிப்பு
இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.
உரை