பாட்டு முதல் குறிப்பு
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
2.
அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து,-பணிமொழி!-
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள்.
உரை