பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
3. மின்னும், முழக்கும், இடியும் மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய,-முல்லை
முகை வென்ற பல்லினாய்!-இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்?