பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
36. கடிது ஓடும் வெண்தேரை, ‘நீர் ஆம்’ என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல்,-நல்லாய்!-
தொடி ஓடி வீழத் துறந்து?