5. நெய்தல்
அல்லகுறிப்பட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய், தோழி, தலைமகட்குச் சொல்லியது
41. தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து,
ஒண் தடங் கண் துஞ்சற்க!-ஒள்ளிழாய்!-நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால்; என் கொலோ,
பூந் தலை அன்றில் புலம்பு?