பாட்டு முதல் குறிப்பு
தலைமகனைத் தோழி வரைவு கடாதற்பொருட்டுத் தலைமகள்
வரைவு வேட்டுச் சொல்லியது
45.
ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன்
சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,-
மாந் தளிர் மேனியாய்!-மன்ற விடுவனவோ,
பூந் தண் பொழிலுள் குருகு?
உரை