ஐந்திணை எழுபது
(மூவாதியார்)
1. குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது
1. அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை.