பாட்டு முதல் குறிப்பு
தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
12.
பெருங்கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.
உரை