பாட்டு முதல் குறிப்பு
வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத்
தலைமகள் அறத்தொடு நின்றது
13.
வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும்,
நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும்
ஈர, வலித்தான், மறி.
உரை