2. முல்லை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
15. செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால்,
பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர,
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும்
நீரோடு அலமரும், கண்.