தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது
3. இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்,
குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை
அலையும் அலை போயிற்று, இன்று.