தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
4. மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம்.