பாட்டு முதல் குறிப்பு
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
6.
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து?
உரை