பாட்டு முதல் குறிப்பு
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால்
தோழி வரைவு கடாயது
7.
காய்ந்தீயல், அன்னை! இவேளா தவறு இலள்;-
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட,
தாம் சிவப்பு உற்றன, கண்.
உரை