தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
9. மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி
ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து.