திணைமாலை நூற்றைம்பது

(கணிமேதாவியார்)

1. குறிஞ்சி

தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று,
தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது
1. நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால்
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல்,-பிறை எதிர்ந்த
தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்!-காணீரோ,
ஏ மரை போந்தன ஈண்டு?