பாட்டு முதல் குறிப்பு
தோழி நெறி விலக்கியது
10.
கரு விரல், செம் முக, வெண் பல், சூல், மந்தி
பரு விரலால் பைஞ் சுனை நீர் தூஉய், பெரு வரைமேல்
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ,
வான் தேவர் கொட்கும் வழி!
உரை