பருவம் கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது
100. பண்டு இயையச் சொல்லிய சொல் பழுதால்; மாக் கடல்
கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது; ஆகவே,
பீர் தோன்றி, நீர் தோன்றும், கண்.