பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த்
தோழி கேட்பச் சொல்லியது
104. ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், ‘பூக்கு’ என்று,
கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து.